Publish Date: Thu, 20 Mar 2008 (16:40 IST)
Updated Date: Thu, 20 Mar 2008 (16:40 IST)
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக பட்ஜெட்டில் ரூ.152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பட்ஜெட்டில், "தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலத் திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 66 இலட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, ஓய்வூதியம், ஈமச் சடங்கு உதவி மற்றும் இழப்பீடு போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக ரூபாய் 152 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.