Publish Date: Mon, 11 Feb 2008 (15:38 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (15:38 IST)
தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. இதனால் வரும் 12ஆம் தேதி வரை சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழைராஜ் என்பவர் மழை பற்றி கணித்து அனுப்பியுள்ளார்.
அதில், மேலும் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் மழை தேதியின் கணிப்பின்படி பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வரையும் மேற்கண்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புது. பிப்ரவரி 24 முதல் 27 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும்.
பிப்ரவரி மாதம் 14, 21, 26 ஆகிய தேதிகளில் மிதமான மற்றும் பலத்த நிலநடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
Webdunia
Publish Date: Mon, 11 Feb 2008 (15:38 IST)
Updated Date: Mon, 11 Feb 2008 (15:38 IST)