வேளாண் துறையில் ஆஸ்ட்ரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் முடிவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
வேளாண் துறையில் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இணைந்து செயல்படவும் உதவும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை ஆஸ்ட்ரேலியாவுடன் மேற்கொள்ள, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒன்று ஒப்புதல் வழங்கியது.
5 ஆண்டுகள் செயலில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, விலங்குகள் நலம், மீன்வளம், கோழிப்பண்ணை, வேளாண்மை விரிவாக்கம், நிலவள மேம்பாடு, நீர்வள மேம்பாடு, வேளாண் வணிக விரிவாக்கம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழி ஏற்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷி கூறினார்.
வரி வருமானம், பொருளாதாரத் துறைகளில் ஜாம்பியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.