தேசிய அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நீர் ஆதார பயன்பாட்டுத் திட்டங்களை பதினோராவது திட்டக் காலத்தில் தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ரூ.43,700 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கு கூடுதல் பாசன வசதி கிடைக்கும்.
பத்தாவது திட்டக்காலத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டப் பணிகளை (Accelerated Irrigation Benefits Programme)முடிப்பதற்கும், பதினொராவது (2007-12) திட்டக் காலத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்களுக்குமாக மொத்தம் 43,700 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் அத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது.
தேசிய நீர்த் திட்டங்களில், மொத்த திட்டச் செலவில் 90 விழுக்காடு மத்திய அரசின் நிதியுதவியுடன் நாடு பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் பன்னாட்டுநீர்த் திட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான நீர்த் திட்டங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் தொடர்புடைய நீர்த்திட்டங்களுக்கு அரசு வழங்கும் 90 விழுக்காடு உதவித் தொகையை மானியமாக வழங்கும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மானியம் வழங்கும் போது, பன்னாட்டுதிட்டங்களை பொறுத்த மட்டில் ஒப்பந்தம் அல்லது திட்டம் தொடங்கப்படும் விவரம், முடிக்கப்படும் காலம் ஆகியவை நாட்டின் நலன் சார்ந்து கருத்தில் கொள்ளப்படும். இரு மாநிலங்களுக்கு இடையேயான திட்டத்தைப் பொறுத்த மட்டில் திட்டச் செலவுகளை பகிர்ந்து கொள்வது, மறுகுடியமர்த்தல், மின்சார உற்பத்தி, ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட விசயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலதிட்டங்களைப் பொறுத்த மட்டில், இவை கூடுதலாக 2 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதியளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. அதேநேரத்தில் நீர் மின் திட்டங்கள் அமைக்கப்படும் நிலையில் நீர் பங்கீட்டில் சிக்கல் இல்லாத திட்டங்களுக்கு தான் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் தற்போது நாட்டில் ஒருங்கிணைந்த நீர் ஆதாரபயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உதவும் என்றும், கூடுதலாக பாசன வசதியையும் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளாண் நிலங்களுக்கான பாசனவசதி திறனை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பன்னாட்டு ஒப்பந்தங்கள் அடிப்படையிலான நீர் ஆதாரங்கூடன் நாட்டின் கூடுதல் பாசன வசதி திறனை அதிகரிக்கவும் இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.