ஜனவரி 30ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக மேகத்தை ஆய்வு செய்து மழை பற்றிய கணிப்புகளை வெளியிட்டு வரும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் எமது தமிழ்.வெப்துனியா.காமிற்கு கணித்து அனுப்பியுள்ளபடி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தெற்கே உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 29 அல்லது 30 ம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மற்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், பிப்ரவரி மாதம் 4, 14, 21, 26 ஆகிய தேதிகளில் மிதமான மற்றும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.