Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1,000 இல்லையேனில் நெல் பயிரிட மாட்டோம் : விவசாயிகள் அறிவிப்பு!

ரூ.1,000 இல்லையேனில் நெல் பயிரிட மாட்டோம் : விவசாயிகள் அறிவிப்பு!
, திங்கள், 31 டிசம்பர் 2007 (14:29 IST)
நெல்லுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1,000 என அறிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதிக்கு பிறகு நெல் பயிரிடுவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக (அரசு கொள்முதல் விலை) கோதுமைக்கு குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவித்தது. இதே போல் நெல்லுக்கும் குவின்டாலுக்கு ரூ. ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

இதற்காக ரயில் மறியல், சாலையில் நெல் கொட்டுவது உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை இது வரையிலும் ஏற்கவில்லை.

எனவே வருகின்ற ஜனவரி மாதம் முதல் நெல் பயிரிடுவதில்லை என்றும், அத்துடன் நிலவரி செலுத்துவதில்லை, வங்கியில் வாங்கிய பயிர் கடனை திருப்பி செலுத்துவதில்லை என்றும் விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ்நாடு தோட்ட பயிர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்த சங்கத்தின் தலைவர் புலியூர். ஏ.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதிக்கு பிறகு நெல் பயிரிடுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் நில வரி, வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை திருப்பி செலுத்துவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எல்லா விவசாய சங்கங்களும் பங்கேற்கும் ஒருங்கினைப்பு குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடாக மாநிலத்தில் இருந்து காவேரி தண்ணீர் பெறும் உரிமையை சட்டபூர்வமானதாக ஆக்க தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
விவசாவிளைபொருட்களுக்ககட்டுப்படியாவிலகிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் பயிர் செய்வதை நிறுத்துவது பற்றிய ஆலோசனை சென்ற 14 ஆம் தேதி ஹைதராபாத்திலஇந்திவிவசாசங்கங்களினகூட்டமைப்பநடத்திகருத்தரங்கில் முனவைக்கப்பட்டது.

அப்போது இந்கூட்டமைப்பினபொதுசசெயலாளரி. செங்களரெட்டி கூறுகையில், விவசாயிகளினபிரச்சனைக்கதீர்வகாபயிரசெய்யுமமொத்பரப்பளவில் 10 விழுக்காடஅள‌வி‌ற்கபயிரசெய்யாமலஇருப்பது. இதனமூலமவிளபொருட்களினதேவையஅதிகரிக்செய்வதஎன்றதெரிவித்து இருந்தார்.

அப்போது பாரத் ‌விவசா‌யிக‌ளச‌ங்க‌ததலைவரஅஜ்மிரசிஙலோங்வாலசெய்தியாளர்களிடமபேசுகையில், 10 விழுக்காடபரப்பளவிலபயிரசெய்யாமலஇருப்பதஎங்களினஎதிர்ப்பகாண்பிப்பதற்காஅடையாபூர்வமாபோராட்டமே. இதமற்விவசாசங்கங்களுமஏற்றுககொண்பிறகஅமலபடுத்தப்படுமஎன்றதெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil