Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநில அரசுகளே கரும்புக்கு கூடுதல் விலையை கொடுக்க வேண்டும் : சரத் பவார்!

மாநில அரசுகளே கரும்புக்கு கூடுதல் விலையை கொடுக்க வேண்டும் : சரத் பவார்!
, வெள்ளி, 21 டிசம்பர் 2007 (19:27 IST)
கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கும் கரும்பிற்காக குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கிறது. இத்துடன் மாநில அரசுகள் கரும்பிற்கான கூடுதல் விலையை அறிவிக்கின்றன.

சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையையும், மாநில அரசுகள் அறிவிக்கும் கூடுதல் விலையையும் சேர்த்து கொடுக்க வேண்டியதுள்ளது.

மாநில அரசுகள் அறிவிக்கும் கூடுதல் விலையை அந்தந்த மாநில அரசுகளே கொடுக்க வேண்டும் என்று சர்க்கரை ஆலைகள் பல ஆண்டுகளாக கூறிவருகின்றன.

இந்த நிலையில் புது டெல்லியில் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் 73 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார், சர்க்கரை ஆலைகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நெடுநாள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாகவும், மாநில அரசுகளே அவை அறிவிக்கும் கூடுதல் விலையை கொடுப்பதற்கு ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்த வருடம் சர்க்கரை ஆண்டின் இறுதியில் (2006 செப்டம்பர் முதல் 2007 அக்டோபர் வரை) சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,600 கோடியாக அதிகரித்துள்ளது என்று சர்க்கரை ஆலை அதிபர்கள் கூறியதை ஏற்றுக் கொண்ட சரத் பவார், சர்க்கரையின் சந்தை விலைக்கு ஏற்றார் போல் கரும்புக்கான விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற சர்க்கரை ஆலைகளின் கோரிக்கையை குறிப்பிட்டு இது விஷயமாக அரசு ஆலோசிக்கு வருவதாக கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், கரும்புக்கு கூடுதல் விலையை நிர்ணயிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே அதிகளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு அக்டோபர் மாதத்தில் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளது. இதற்கு மாநில அரசுகள் சாதமாக கருத்து தெரிவித்தன. ஆனால் கரும்புக்கான விலையை நிர்ணயிப்பது பல விளைவுகளை உண்டாக்கும் உணர்ச்சிகரமான பிரச்சனையாக இருக்கின்றது. இதனால் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்பட வில்லை.

சர்க்கரை ஆலைகள் கரும்பு கொள்முதல் செய்யும் பரப்பை 15 கி.மீட்டர் சுற்றளவில் இருந்து 25 கி.மீட்டர் சுற்றளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்ற துடிஜா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. சர்க்கரை ஆலைகள் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்கு பதிலாக கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று பவார் கேட்டுக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil