Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதுமை உற்பத்தி 755 லட்சம் டன் : அரசு நம்பிக்கை!

கோதுமை உற்பத்தி 755 லட்சம் டன் : அரசு நம்பிக்கை!
, புதன், 19 டிசம்பர் 2007 (18:05 IST)
கோதுமை உற்பத்தி எதிராபார்த்த அளவு இருக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கோதுமை பயிரிடப்படும் பல வடமாநிலங்களில் அதிகளவு வெப்பமும், வறட்சியும் நிலவியதால் பயிரிடப்படும் பரப்பளவு குறையும். இதை தொடர்நது கோதுமை உற்பத்தியும் குறையும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய விவசாய அமைச்சகம் மார்ச் மாதம் அறுவடையாகும் கோதுமை உற்பத்தி எதிர்பார்த்த அளவு இருக்கும் என்று கூறியுள்ளது.

மத்திய விவசாய அமைச்சகம் கோதுமை விளைச்சல் பற்றிய பரிசீலனை கூட்டத்தை நடத்தியது. இதை மத்திய விவசாய துறை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் கோதுமையை அதிகளவு பயிரிடும் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷம், பீகார், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய துறை முதன்மை செயலாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்கு பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த வருடம் 275 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. இது சராசரியாக பயிரிடப்படும் 260 லட்சம் ஹெக்டேரை விட அதிகம். மத்திய பிரதேசத்தில் குவாலியர், ரீவா, சாகர் பிராந்தியத்திலும், உத்தரபிரதேசத்தில் புடில்காந்த் பிராந்தியத்தில் அதிக வெப்பம், நிலத்தில் ஈரத்தன்மை இல்லாததால் பயிரிவது குறைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் மழை பெய்யும் பகுதியும் பாதிக்கப்பட்டன.

அதே நேரத்தில் பஞ்சாப், ஹரியானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் சென்ற வருடத்தைவிட கூடுதலாக இரண்டு லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கோதுமையின் ஆதார விலையை அதிகரித்ததால் கோதுமை பயிரிடுவதற்கு விவசாயிகள் மத்தியில் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியான விவசாயிகள் மத்தியில் அதிகளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் சாதகமான பருவநிலை நிலவுவதும், தரமான கோதுமை, உயிர்ச்சத்து உரங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதால் அதிக விளைச்சல் இருக்கும் என்று மாநில அரசுகள் கருத்து தெரிவித்தன. தற்போதுள்ள பருவநிலையே நீடித்தால் 755 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil