Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

800 கிராமங்களில் காடுவளர்ப்பு திட்ட பணி: அமைச்சர் செல்வராஜ்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

800 கிராமங்களில் காடுவளர்ப்பு திட்ட பணி: அமைச்சர் செல்வராஜ்
, புதன், 12 டிசம்பர் 2007 (12:02 IST)
தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக 800 கிராமங்களில் ஜப்பான் நாட்டு உதவியுடன் காடுவளர்ப்பு திட்ட பணிகள் நடந்து வருவதாக வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் என்.செல்வராஜ் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், ஆசனூர் ஆகிய பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா முன்னிலை வகித்தார். வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் என்.செல்வராஜ் தலைமை தாங்கி நலத்திட்டங்கள் வழங்கினார்.

பின் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், சாம்ராஜ்நகர் சத்தியமங்கலம் ரயில்வே திட்டத்திற்கு வனப்பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்பாதை அமைவது உச்சநீதிமன்ற உத்திரவுப்படி நடக்கும். ரயில்பாதை வந்தால் வனவிலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.

தமிழ்நாட்டில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் முதல்கட்டமாக 4.80 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் காடுவளர்ப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தற்போது 1.775 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் 200 பழங்குடி கிராமங்கள் உட்பட 800 கிராமங்களில் ரூ.567.42 கோடி செலவில் காடுவளர்ப்பு பணி நடந்து வருகிறது. இதில் ஜப்பான் நாட்டின் கடனுதவி ரூ.409.8 கோடியாகும். வனப்பகுதி நிலங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று அமைச்சர் செல்வராஜ் கூறினார்.

விழாவில் வனத்துறை செயலாளர் ராஜகோபால்,ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் துரைராசு, சத்தி மாவட்ட வனஅதிகாரி இராமசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Share this Story:

Follow Webdunia tamil