Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரிதாபமான நிலையில் இ‌ந்‌திய விவசாயம்: சோப்ரா!

Advertiesment
பரிதாபமான நிலையில் இ‌ந்‌திய விவசாயம்: சோப்ரா!

Webdunia

, சனி, 24 நவம்பர் 2007 (12:03 IST)
''இந்தியாவில் விவசாயம் பரிதாபமான நிலையில் உள்ளது'' என்று திட்டக் ஆணைய உறுப்பினர் (விவசாயம்) வி.எல்.சோப்ரா கூறியுள்ளார்.

போபாலில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்திய வி்ஞ்ஞான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சோப்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறிதாவது: நிலத்தடி நீர் மட்டம் குறைவதும், மண்ணில் ஊட்டச்சத்து குறைவது‌‌ம் கவலையாக உ‌ள்ளது. இந்தியாவின் விவசாயம் எதிர்காலத்தில் நிச்சயமாக கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை. இதற்கு மாநில அரசுகளும் காரணம். ஏனெனில் விவசாயம் மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும், மண்ணின் தன்மையும் குறைவதால், விவசாயம் செய்வது லாபகரமானதாக இல்லை. இது பற்றிய விவாத‌ங்கள் தான் நடக்கிறதே ஒழிய, எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை.

தொழில் கொள்கைகளை போல, விவசாயத்திற்கு ஒரே மாதிரியான கொள்கைகளை அமல்படுத்த முடியாது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மாநில அரசுகள் சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். நாட்டில் உணவு உற்பத்தி வேகமாக குறைந்து வருகிறது. இதனால் கையிருப்பும் குறைந்து வருகிறது. இந்த நிலையை சமாளிக்க உணவுப் பொருட்களை போதிய கையிருப்பு வைக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தை முறையாக நடத்த வேண்டும்.

விவசாயம் செய்ய முடியாமல் உள்ள பரிதாபமான நிலையில், எதிர்காலத்தில் விவசாயம் செய்வதை விட உணவு பொருட்களை இறக்குமதி செய்வதே சிறந்தது என்ற கருத்து உருவாகலாம். இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் தான். அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவு தா‌னியங்களின் விலை அதிகளவு உள்ளது என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil