Newsworld Finance Agriculture 0711 24 1071124004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் உரம் தட்டுப்பாடு

Advertiesment
தமிழ்நாட்டில் உரம் தட்டுப்பாடு
, சனி, 24 நவம்பர் 2007 (10:16 IST)
தமிழகத்திற்கு தேவையான யூரியா உட்பட தேவையான உரம் தட்டுபாடில்லாமல் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் ம.தி.முக உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சனையை மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் ம.தி.முக உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யூரியா உட்பட எல்லா வகை உரங்களும் தட்டுபாடில்லாமல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

உரத்தை பதுக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil