Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதுமை இற‌க்கும‌தி ‌விவகார‌ம்: பா.ஜ.க. வெ‌ளிநட‌ப்பு!

கோதுமை இற‌க்கும‌தி ‌விவகார‌ம்: பா.ஜ.க. வெ‌ளிநட‌ப்பு!
, சனி, 24 நவம்பர் 2007 (12:05 IST)
கோதுமை இற‌க்கும‌தி தொட‌ர்பாக வேளா‌ண்மை‌த் துறை அமை‌ச்ச‌ர் சர‌த்பவா‌ர் அ‌ளி‌த்த ப‌தி‌லி‌ல் ‌திரு‌ப்‌தியடையாத பா.ஜ.க. -அத‌ன் கூ‌ட்ட‌ணி‌க் க‌ட்‌சிக‌ளி‌ன் உறு‌ப்‌பின‌ர்க‌ள் ம‌க்களவை‌யி‌‌லிரு‌ந்து வெ‌ளிநட‌ப்பு‌ச் செ‌ய்தன‌ர்.

ம‌க்களவை‌க் கூடியது‌ம் கே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன் போது பா.ஜ.க ம‌க்களவை‌த் துணை‌ததலைவ‌ர் ‌விஜயகுமா‌ர் ம‌ல்கோ‌த்ரா கோதுமை இற‌க்கும‌தி தொட‌ர்பாக கவஈ‌ர்‌ப்பு ‌தீ‌ர்மான‌ம் ஒ‌ன்றை‌க் கொ‌ண்டு வ‌ந்தா‌ர். வறுமை‌க் கோ‌ட்டிற்க்கு ‌கீ‌ழ்வாழு‌ம் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு வழ‌ங்க‌ப்படு‌ம் கோதுமை புழுத்துபோய், தர‌மற்றதாக உ‌ள்ளதேன கு‌ற்ற‌ம் சா‌ட்டினா‌ர்.

ம‌த்‌திய ‌பிரதேச‌ம், ராஜ‌ஸ்தா‌ன், கேரளா உ‌ள்‌ளி‌ட்ட மா‌நில‌ங்க‌ள் இது தொட‌ர்பாக ம‌த்‌திய அரசு‌க்கு புகா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதையு‌ம் சு‌ட்டி‌க்கா‌ட்டினா‌ர். ‌நியாய ‌விலை‌க் கடைக‌ளி‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌க் கோதுமையை நாடு முழுவது‌ம் பெரு‌ம்பாலான ம‌க்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.

உ‌ள்நா‌ட்டு ச‌ந்தை‌யி‌ல் உ‌ள்ள ‌விலையை விட அதிக ‌விலை கொடு‌த்து இ‌ந்த ரக கோதுமை இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப் ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்‌. ஒரு ட‌ன் கோதுமை 263 டாலரு‌க்கு ‌வி‌நியோ‌கி‌க்க ஒ‌ப்ப‌ந்த‌ப் பு‌ள்‌ளி கோர‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல், அ‌ந்த ஒ‌ப்ப‌ந்த பு‌ள்‌ளி இர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு, பு‌திதாக மறு ஒ‌ப்ப‌ந்த‌ப் பு‌ள்‌ளி கோர‌ப்ப‌ட்டு ஒரு மெ‌ட்‌ரி‌க் ட‌ன் கோதுமை‌350 டாலரு‌க்கு வா‌ங்க‌ப் ப‌ட்டு‌ள்ளது என்று குற்றம்சாற்றினார்.

ம‌ல்கோ‌த்ரா எழு‌ப்‌பிய கே‌ள்‌விகளு‌க்கு ம‌த்‌திய வேளா‌ண் துறை அமை‌ச்ச‌ர் சர‌த்பபவா‌ர் ப‌தில‌ளி‌த்தா‌ர். அ‌‌ப்போது, நா‌ட்டி‌ன் உணவு கை‌யிரு‌ப்பையு‌ம், தேவை‌க்கு‌ம், இரு‌ப்பு‌க்கு‌ம் உ‌ள்ள இடைவெ‌ளியை குறை‌க்கவுமே கோதுமை இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப் ப‌ட்டதாக கூ‌றினா‌ர்.‌ நியாய ‌விலைக் கடைக‌ள் மூல‌ம் வறுமை‌க் கோ‌ட்டு‌க்கு ‌கீ‌ழ் வாழு‌ம் ம‌க்களு‌க்கு வழ‌ங்க‌ப் ப‌ட்டு வரு‌ம் கோதுமை தரம‌ற்றத‌ல்ல எ‌ன்று கூ‌றினா‌ர்.

சிவ‌ப்பு கோதுமை தொட‌ர்பாக புகா‌ர் செ‌ய்து‌ள்ள மா‌நில‌ங்க‌ளி‌ல் உ‌‌ள்ள இ‌ந்‌திய உணவு‌க் கழக‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌கிட‌ங்குக‌ளி‌‌ல் உ‌ள்ள கோதுமைக‌ளி‌ன் மா‌தி‌ரி- ஆ‌ய்வு ப‌ணிக‌ளை அ‌ந்த‌ந்த மா‌நிலங்க‌ளி‌ன் உணவு‌த் துறை அ‌திகா‌ரிக‌‌ளும், இ‌‌ந்‌திய உணவு‌க் கழக அ‌திகா‌ரிகளு‌ம் கூ‌ட்டாக மே‌ற்கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌‌ன்று கூ‌றினா‌ர்.

இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட கோதுமை க‌ப்ப‌லி‌ல் இரு‌ந்து இ‌ந்‌‌திய துறைமுக‌ங்க‌ளி‌ல் இற‌க்க‌ப்படுவத‌ற்கு மு‌ன்னதாகவே இ‌ந்‌திய கல‌ப்பு தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ன் படி அ‌திகா‌ரிக‌ள் அத‌ன் தர‌த்தை சோ‌தி‌த்து பா‌ர்‌த்து தர‌த்தை உறு‌தி செ‌ய்து‌ள்ளதாகவு‌ம் கூ‌றினா‌ர். அனை‌த்து ‌வி‌திமுறைகளு‌க்கு‌ம் உ‌ட்ப‌ட்டு தகு‌தியானது எ‌ன்று தெ‌ரி‌ந்த ‌பி‌ன்பே க‌ப்ப‌லி‌ல் இரு‌ந்து ‌கீழே இற‌க்க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டது எ‌ன்று சர‌த்பவா‌ர் கூ‌றினா‌ர். மேலு‌ம், மா‌நில‌ங்க‌ளி‌‌ல் உ‌ள்ள ‌நியாய ‌விலை‌க் கடைகளு‌க்கு கோதுமையை ப‌கி‌ர்‌‌ந்து கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்நா‌ட்டு கோதுமை, இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட கோதுமை எ‌ன்று ‌பி‌ரி‌த்து பா‌ர்‌த்து கொடு‌க்கவி‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.

தர‌ப் ப‌ரிசோதனை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப் ப‌ட்ட கோதுமை, உ‌ள்நா‌ட்டு கோதுமையை‌ப் போ‌ன்றுதா‌ன் உ‌ள்ளதாக கூ‌றினா‌ர். கோதுமை அ‌திக அளவு ‌விளை‌வி‌க்கு‌ம் நாடான ஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌ல் வற‌ட்‌‌சி, ப‌யி‌ர் ‌விளை‌ச்ச‌ல் குறைவு காரண‌ங்களா‌ல் அ‌திக ‌விலை கொடு‌த்து இற‌க்கும‌தி செ‌ய்ய வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்த ஆ‌ண்டு 74.76 ‌மி‌‌ல்‌லிய‌ன் ட‌ன்க‌ள் கோதுமை ‌விளை‌ச்ச‌ல் இரு‌ந்ததாகவு‌ம், 11 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன்க‌ள் கோதுமை பொது ‌வி‌நியோக ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காக கொள்முத‌ல் செ‌ய்ய‌ப் ப‌ட்டதாகவு‌ம் கூ‌றினா‌ர். ஆனா‌ல் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு மொ‌த்த‌ம் 15 ‌‌மில்‌லிய‌ன் ட‌ன்க‌ள் தேவையெ‌ன்று‌ம், உ‌ள்நா‌ட்டு‌த் தேவையை எ‌தி‌ர்கொ‌ள்ளவே கோதுமை இற‌க்கும‌தி செ‌‌ய்ய‌ப் ப‌ட்டதாகவு‌ம் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்த சர‌த்பவா‌ர், இது தொட‌ர்பாக ம‌த்‌திய புலனா‌ய்வு‌த் துறை ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்‌க் க‌ட்‌சிக‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

இதனை‌த் தொட‌ர்‌ந்து அமை‌ச்ச‌ர் சர‌த் பவா‌ரி‌ன் பதி‌‌ல் ‌திரு‌ப்‌தியளிக்கவில்லை என்று கூறி பா.ஜ.க. உள்ளிட்ட தே‌சிய ஜனநாயக கூ‌ட்ட‌ணி க‌ட்‌சிக‌‌ளி‌ன் உறு‌ப்‌பின‌‌ர்க‌ள் சபையை ‌வி‌ட்டு வெ‌ளிநட‌ப்பு‌ச் செ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil