Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் கொ‌ள்முத‌ல் ‌விலை: விவசாயிகள் 27‌ல் ர‌யி‌ல் மறியல்!

நெல் கொ‌ள்முத‌ல் ‌விலை: விவசாயிகள் 27‌ல் ர‌யி‌ல் மறியல்!

Webdunia

, சனி, 17 நவம்பர் 2007 (18:22 IST)
மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கோதுமைக்கு குவி‌‌ண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதே போல் நெல்லுக்கும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.1000 என அறிவிக்க கோரி விவசாயிகள் சாலை, ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாள‌ர் வே.துரை மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நெல்லுக்கு ஊக்கத்தொகையாக ( போனஸ் ) குவி‌ண்டாலுக்கு ரூ.50 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதல் ரக நெல்லுக்கு ( சன்ன ரகம் ) குவி‌ண்டாலுக்கு ரூ.775. இரண்டாம் ரக நெல்லுக்கு ரூ. 745 கிடைக்கும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் நெல் விலை பற்றியும், கோதுமை விலை பற்றியும் ஒப்பீடு செய்து கருத்து தெரிவித்துள்ளார். கோதுமை 100 விழுக்காடு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நெல்லில் இருந்து 65 விழுக்காடு மட்டுமே அரிசி கிடைக்கிறது. ‌மீதம் 35 விழுக்காடு கழிவுப் பொருளாக ஆகி விடுகிறது என்று சர‌த்பவா‌ர் கூறியுள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் கருத்து ஏற்புடையதல்ல. அரிசி போக மீதமுள்ள 35 விழுக்காடு கழிவுப் பொருளாக மாறுவதில்லை. தவிடாகவும், தவிட்டிலிருந்து சமையல் எண்ணெ‌ய்யாகவும் மாற்றப்படுகிறது.

நெல் உற்பத்தியில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வறட்சி, வெள்ளம், புயல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற இடர்பாடுகள் ஏற்படும் போது, விவசாயிகளுக்கு நஷ்டம் அதிகரிப்பதுடன் செலவிட்ட மூலதனமும் முற்றிலும் கிடைக்காமல் போவதுண்டு. வேறு எந்த தொழில் சார்ந்தவர்களும் அடக்கத்திற்கு செலவிற்கு குறைவாக பொருட்களை விற்பதில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil