பவானிசாகர் அணை தற்போது முழுகொள்ளவு எட்டியுள்ளதால் மீன்பிடிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது, இதையடுத்து ஆகஸ்ட்டு, செப்டம்பவர், அக்டோபர் மற்றும் நவம்பர் என தொடர்ந்து ஐந்து மாதங்கள் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டி சாதனை படைத்தது.
இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மீனவர்களுக்கு பெரும் சோத்ததை தந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் அணையின் நீர்தேக்கத்தில் மீன்பிடிப்பு தொழில் நன்கு நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் நாள் ஒன்றுக்கு 1 டன் மீன்களுக்கு மேல் கிடைத்தது.
ஆனால் கடந்த நான்கு மாதங்களாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 600 டன் மீன்வரை மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் பகுதியில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அணையில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது மீன்கள் ஆழத்தில் சென்றுவிடுவதால் வலையில் சிக்குவதில்லை. தண்ணீர் குறைவாக இருக்கும் சமயத்தில் மீன்கள் சாதாரணமாக வலையில் மாட்டிக்கொள்ளும்.
தற்போது பவானிசாகர் பகுதியில் பல்வேறு மீனவர்கள் வேறு தொழில்நோக்கி வெளியூர்களுக்கு சென்றுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.