Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி-வைகை நதிகளை இணைக்க ‌த‌‌மிழக அரசு ‌தி‌ட்ட‌ம்!

காவிரி-வைகை நதிகளை இணைக்க ‌த‌‌மிழக அரசு ‌தி‌ட்ட‌ம்!

Webdunia

, புதன், 7 நவம்பர் 2007 (11:56 IST)
கா‌வி‌ரி- வைகை ஆ‌கிய ந‌திகளை இணை‌க்க ஆ‌ய்வு செ‌ய்த த‌மிழக பொது‌ப் ப‌ணி‌த்துறை முத‌ல் க‌ட்டமாக காவிரி நதியில் கரூர் பகுதியில் இருந்து வைகை நதி வரை தனி கால்வாய் வெட்ட வரையறுக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் தமிழ்நாட்டிலகாவிரி, வைகை, தாமிரபரணி நதிகளில் அதிக அளவு உபரி தண்ணீர் வீணாக கடலுக்கு செ‌‌ல்‌கிறது. இதை தடு‌த்து ‌நிறு‌த்த‌ி முறையாக பயன்படுத்தினால் வறட்சி நிலவும் மாவட்டங்களை செழிப்படைய செய்ய முடியும் என்று நிபுணர்கள் அறிக்கைகள் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை காவிரி- வைகை நதிகளை இணைக்க ஆய்வு செய்தது.

முத‌ல் க‌ட்டமாக காவிரி நதியில் கரூர் பகுதியில் இருந்து வைகை நதி வரை தனி கால்வாய் வெட்ட வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் அருகே உள்ள கட்டளையில் குண்டாறு வரை கால்வாய் வெட்டப்படும். குண்டாறு அக்னியார், தெற்கு வெள்ளார், பம்பார், கோட்ட கரையாறு போன்ற சிற்றாறுகளுடன் இணைக்கப்படும். முடிவில் வைகை நதியுடன் சேரும். மொத்தம் 225 கி.ீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டு காவிரி-வைகை நதிகள் இணைக்கப்படும்.

இதனால் காவிரியில் வரும் உபரித் தண்ணீர் வைகை நதிக்கு செ‌ன்றடையு‌ம். இதன் மூலம் காவிரி வெள்ளப்பெருக்கு சேதங்களை தவிர்க்கலாம். அதோடு வறட்சி மாவட்டங்களும் வளம் பெறும். காவிரி உபரித்தண்ணீர் திசை திருப்பப்பட்டு வைகை நதிக்கு வந்தால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அதிக பயனடையு‌ம். இரண்டு கட்டங்களாக இந்த நதிகள் இணைப்பை நிறைவேற்ற முடியும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட பணிகளை நிறைவேற்ற ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.

காவிரி- வைகையை இணைக்க மொத்தம் 3684 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். தற்போதைய ஆய்வுப்படி 2228 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்த வேண்டியதிருக்கும். 1416 ஹெக்டேர் நிலம் புறம்போக்கு நிலங்களாகும். மற்றபகுதிநிலங்கள் வனஇலாக பொறுப்பில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil