Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளத்தால் 40 லட்சம் அரிசி உற்பத்தி குறையும்!

வெள்ளத்தால் 40 லட்சம் அரிசி உற்பத்தி குறையும்!

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (18:15 IST)
இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் இந்த வருடம் 40 லட்சம் அரிசி உற்பத்தி குறையும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த இயற்கை பேரிடரால் 23 ல‌ட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. (1ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர் ) இந்த நிலங்க‌ளில் உள்ள நெற்பயிர்கள் அழுகி போய்விட்டன. இதனால் சுமார் 40 லட்சம் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும்.

மத்திய அரசின் புள்ளிவிபரப்படி இந்தியாவின் ‌கிழ‌க்கு பகுதி மாநிலங்களான ‌‌பீகாரில் 14.4 லட்சம் ஹெக்டேர், கர்நாடகாவில் 4.16 லட்சம் ஹெக்டேர், அஸ்ஸாமில் 2.25 லட்சம் ஹெக்டேர், மேற்கு வங்கத்தில் 1.25 லட்சம் ஹெக்டேர், ஒரிசாவில் 0.85 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் சமீபத்தில் வட கிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தமிழ்நாட்டில் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த நெற்பயிர்கள் அழிந்து போயுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதில் சிறிது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில், மத்திய அரசின் கொள்முதலில் கிழக்கு பகுதி மாநிலங்களின் பங்கு மிக குறைவாகவே உள்ளது,. இந்த மாநிலங்களில் இருந்து சென்ற ஆண்டு கரீப், ராபி ஆகிய இரண்டு பருவத்திற்கும் சேர்த்து மத்திய அரசின் தொகுப்பிற்கு 31.35 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது மத்திய அரசு கொள்முதல் செய்த மொத்த நெல்லில் 12.5 விழுக்காடு. இதில் ஒரிசா மாநிலத்தில் இருந்து மட்டும் 19.93 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய வெள்ளத்தால் ஒரிசா மாநிலம் அதிகளவு பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

அதே நேரத்தில் கிழக்கு பகுதி மாநிலங்கள் உற்பத்தியாகும் நெல்லை மத்திய அரசின் தொகுப்பிற்கு வழங்காமல், வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தால், வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் அரிசியின் அளவு குறையும். முன்பு வெளிச்சந்தையில் அரிசி வாங்கியவர்கள் கூட தற்போது ரேஷன் கடைகளில் அரி‌சி வாங்க துவங்குவார்கள். அத்துடன் அரிசியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய தொகுப்பிற்கு நெல் வழங்கும் மேற்கு பகுதி மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் நெற் பயிருக்கு எவ்வித சேதமும் இல்லை.

மத்திய தொகுப்பில் அக்டோபர் 1ஆ‌ம் தேதி நிலவரப்படி 55 லட்சம் டன் அரிசி இருப்பில் உள்ளது. இது அவசரகால குறைந்தபட்ச இருப்பை விட 3 லட்சம் டன் அதிகம் ( அவசரகால இருப்பு 52 லட்சம் டன்).

இந்த ஆண்டு நவம்பர் 2 ஆ‌ம் தேதி வரை இந்திய உணவு கழகம், மற்றும் மாநில அரசுகளின் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை சுமார் 77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளன. இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4 லட்சம் டன் குறைவு.

மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, அரிசி உற்பத்தி குறைந்தால் கூட அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசு சமீபத்தில் பாசுமதி தவிர மற்ற சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் டன் அரிசி நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. இவை உள்நாட்டில் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கின்றது. இது வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil