மத்திய அரசு நெல்லுக்கு ஆதாரவிலையாக குவின்டாலுக்கு ரூ.1,000 அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க தலைவருமான புலியூர் நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் வேளான் விளை பொருட்களுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழு கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000 என அறிவித்துள்ளது. சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.725 எனவும், மற்ற ரகங்களுக்கு ரூ.695 என அறிவித்துள்ளது. மத்திய அரசு அரிசிக்கு அறிவித்துள்ள ஆதார விலை விவசாயிகளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகளின் குறையை தீர்க்க வேண்டும் என்று புலியூர் நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.