தமிழக அரசு குறுவை மற்றும் சம்பா பருவத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கான விலையை அதிகரித்துளளது.
இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் சி. விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூ.675, மற்ற ரக நெல் குவினடால் ரூ.645 என்ற விலையில் கொள் முதல் செய்யப்படும். இது சென்ற வருடத்தைவிட குவின்டாலுக்கு ரூ.25 அதிகம்.
தஞ்சை மாவட்டத்தில் சென்ற 1 ஆம் தேதியில் இருந்து 30 நேரடி கொள்முதல் மையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கப்படுகிறது. விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு அதிக கொள்முதல் மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தையோ அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பிராந்திய அலுவலகங்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.