மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை அணையின் நீர் மட்டம் 116.5 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 13,721 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கன அடி நீர் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் திறந்து விடப்படுகிறது.
கடந்த வாரம் காவிரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகளவு இருந்து. இந்த வருடம் ஆறாவது முறையாக நீர் மட்டம் 120 அடியை தொட்டது குறிப்பிடத்தக்கது.