Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரிப் பருவத்தில் தானியம், பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ள அளவு அதிகரிப்பு!

கரிப் பருவத்தில் தானியம், பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ள அளவு அதிகரிப்பு!

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (17:29 IST)
இந்கரிபபருவத்தில், சென்வருடத்தைவிஅதிபரப்பளவிலதானியம், பருப்பு மற்றும் எண்ணை வித்துக்கள் பயிரிடப்படுள்ளது.

இந்த கரிப் பருவத்தில் 365.92 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 364.22 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டது)

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் நெல் விதைப்பு முழுமையாக முடியவில்லை.

இந்த மாநிலங்களிலநெல் விதைப்பு முடிந்தவுடன், நெல் பயிரிட்ட பரப்பளவு பற்றி இறுதி நிலவரம் தெரியவரும

மத்திய விவசாய அமைச்சகம் தயாரித்துள்ள புள்ளி விபரப்படி, சென்ற வருடம் செப்டம்பர் 28 ந் தேதி வரை நெல் பயிரிடப்பட்டு இருந்த அளவுடன் ஒப்படும் போது, இந்த வருடம் இது வரை நெல் பயிரிடப்பட்ட அளவு அதிகரித்துள்ளது.

பல மாநிலங்களில் மற்ற தானியங்கள்களின் விதைப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

இது வரை ஜோவர் 34.40 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 36.66 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.). பஜ்ரா 83 இலட்சம் ஹெக்ட்ரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 91.82 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.) மக்காச் சோளம் 76.78 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 72.45 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.) எல்லா வகை.தானிய வகைகளையும் சேர்த்து மொத்தம் 216.09 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 221.01 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.)

இந்த வருடம் இதுவரை பருத்தி 90.94 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 87.48 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.) இது இல்லாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி ரக பருத்தி 53.32 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

கரும்பு மொத்தம் 51.04 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 48.32 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.)

சணல் 8.29 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 8.18 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.)

மிஸ்டா 1.47 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 1.53 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.)

எண்ணைய் வித்துக்கள் இது வரை மொத்தம் 175.99 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது.

சென்ற வருடத்தைவிட, இந்த வருடம், சோயா 8 விழுக்காடும், மணிலா கடலை 14 விழுக்காடு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் 124.79 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 112.41 இலட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.)

இந்த தகவல், மத்திய விவசாய அமைச்சகத்தின் விவசாயத்துக்கான பருவநிலை பற்றிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil