கோவை தாணிய சந்தையில் மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த வாரம் டன் ரூ 6,850 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்தை விட 3 விழுக்காட் குறைவு!
கம்பு விலையும் சென்ற வாரத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு விழுக்காடு குறைந்துள்ளது. இந்த வாரம் டன் ரூ 6,300 ஆக உள்ளது. சோளத்துடன் ஒப்பிடுகையில் கம்பின் விலை 7.8 விழுக்காடு குறைந்துள்ளது. சோளத்தின் விலை சென்ற வாரத்தைவிட 10 விழுக்காடு குறைந்துள்ளது. தற்போது டன் ரூ 8300 முதல் ரூ 8350 வரை விற்பனையாகின்றது. மக்காச் சோளத்துடன் ஒப்பிடுகையில் சோளத்தின் விலை 22 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது.
இந்த ஆண்டு மக்காச் சோளம் 7.671 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 6.1 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் 7,174 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. (கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 6,370 ஹெக்டேரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது )
நாமக்கல் நகரிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள கோழிப் பண்ணைகள் இந்த வகை தாணியங்களை அதிக அளவு வாங்குகின்றன. கோழித் தீவனம் தயாரிக்கவும், கோழிகளின் தீவனத்திற்காகவும் வாங்குகின்றனர். இந்த வருடம் மக்காச் சோளம் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால், கோழித் தீவனத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மக்காச் சோளம் தட்டுப்பாடு ஏற்படாது. சென்ற மூன்று வருடங்களுக்கு முன் மக்காச் சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விலை உயர்ந்து கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டன.