விவசாய எச்சங்களையும், விலங்கின கழிவுகளையும் ஒன்றாக்கி நமது நாட்டில் தொன்றுதொட்டு உருவாக்கப்பட்டு வரும் “ இயற்கை உரமே” நல்ல விளைச்சலை ஈட்டித் தருகின்றது என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத்தின் கம்பட் குடா பகுதியில் உள்ள வறட்சியான பல கிராமங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்டெடீஸ் அண்ட் டிரான்ஸ்பர்மேஷன் எனும் ஆராய்ச்சி பயிலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியிலுள்ள விவசாயிகளுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது.
உயிரினச் சார்பு உயிரி உரம் - அதாவது ‘ புரேபயாட்டிக் ஆர்கனிக் உரம்’ என்று அழைக்கப்படும் நமது பழைய இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து பார்த்துள்ளனர்.
இந்த உரத்தை உபயோகப்படுத்தியதில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், பருத்தி, சீரகம் ஆகியவற்றின் உற்பத்தி 30 முதல் 200 விழுக்காடு வரை அதிகமாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை :
(அ) இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, எந்த ஒரு தனித்த ஆராய்ச்சிக் தடத்திலும் அல்ல; விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் நிலங்களிலேயேஇந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
(ஆ) ஆராய்ச்சி நடத்தப்பட்ட இடமான குஜராத்தின் கம்பட் வளைகுடா பகுதி, மிகுந்த வறட்சியான பகுதியாகும்.
ஒரு சராசரி வறட்சிப் பகுதியிலேயே இந்த அளவிற்கு உற்பத்தி கிடைப்பதில் இருந்து நீர்ப்பாசன வசதி உள்ள இடத்திலும், வறட்சியான வானம் பார்த்த பூமியானாலும் இயற்கை உரமே சிறந்த விளைச்சலை தரும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
விளைச்சல் மட்டுமின்றி இயற்கை உரத்தை பயன்படுத்தி பெறும் உணவு தாணியங்களை உட்கொள்வதால் தற்போது நம்மிடையே பொதுவாக நிலவிவரும் சர்க்கரை வியாதி, மூச்சிரைப்பு, இருதய நோய், மூட்டுவலி, சிறுநீரக கோளாறு, கீல் வாதம் ஆகிய நோய்கள் வருவதில்லை என்பதும இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை பெருமளவு பொய்த்துவிட்ட காரணத்தினால், குஜராத்திலும் கடும் வறட்சி நிலவுகிறது. இவ்வறட்சியின் காரணமாக விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளானது மட்டுமின்றி, கால்நடைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் புற்களுக்கும் கூட பஞ்சமேற்பட்டுவிட்டது. இயற்கை உரத்தையும், நிலத்தின் தன்மையையும் முழுவதுமாக புறக்கணித்ததாலும் பல ஆண்டுகளாக செயற்கை உரங்களையும், இரசாயன இடு பொருட்களையும் பயன்படுத்தியதே இந்த கடும் வறட்சிக்கு காரணம் என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இயற்கை உயிரி உரத்தை பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்ற விவசாயிகளில் ஒருவரான ஜாக்டா கிராமத்தைச் சேர்ந்த தான்ஜிபாய் சாகண்டாய் டாபி, தன் நிலத்தில் பயிர்செய்யப்பட்ட நெற்பயிர் கடந்த பல பருவங்களில் நல்ல மழைக்காலத்திற்கும் பிறகும், வறண்ட காலத்திலும், நல்ல விளைச்சலை பெற்றுத்தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த இயற்கை உயிரி உரத்தை பயன்படுத்தி விதைப்பயிர் விளைவித்து மண் வளத்தை கூட்டிய பின்னர் பருத்தி பயிரிடப்பட்டதில், ஹெக்டேருக்கு 973 கிலோ பருத்தி விளைச்சலாக கிடைத்துள்ளது. ஆனால் யூரியாவைப் பயன்படுத்தி, அருகிலுள்ள நிலத்தில் பயிரிடப்பட பருத்தி, வெறும 529 கிலோ விளைச்சலை மட்டுமே தந்துள்ளது.
கோத் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப்சிங் சௌஹான், இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வணிகப்பயிர் ஒன்று பயிரிட்டதில், ஹெக்டேருக்கு 1,628 கிலோ விளைச்சல் பெற்றுள்ளார். செயற்கை உரம் கொண்டு பெற்ற விளைச்சல் ஹெக்டேருக்கு வெறும 469 கிலோ மட்டுமே.
இயற்கை உயிரி உரத்தின் விரியம் கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் சீரகச்செடி ஆகியவற்றின் விளைச்சலையும் பிரமாதமாக கூட்டியுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
சௌஹான் தனது 2.4 ஹெக்டேர் பரப்பளவு நிலம் ஒன்றில் 150 கிலோ இயற்கை உயிரி உரத்தையும், 30 கிலோ ஆமணக்கு சக்கைகையும், பசு கோமியம் ஆகியன கூட்டிய கலவையில் பண்படுத்திய 80 கிராம் விதைகளைக் கொண்டு, 800 கிலோ விளைச்சலைப் பெற்றுள்ளனர்.
இதுபோலவே தனது 5.4 ஹெக்டேரில் விதைக்கப்பட்ட கோதுமை பயிரை இயற்கை உயிரி உரத்தை பயன்படுத்தியதன் மூலம் இரண்டு டன் கோதுமையை சாகுபடி செய்துள்ளார்.
மத்திய வேளாண்துறை அளித்த, 1986ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவின் இயற்கை உர உற்பத்தி 269 மில்லியன் டன்களாகும். சிறு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து 1998 புள்ளிவிவரப்படி 228 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. வருடத்திற்கு 41 மில்லியன் டன்கள் வீதம், கடந்த 12 ஆண்டுகளில் 272 மில்லியன் டன் இயற்கை உரஉற்பத்தி குறைந்துள்ளது. இது 18 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு தேவையான உர அளவாகும்.
தற்பொழுது nþமற்க் கொþள்ளþப்பட்ட ஒரு கணþக்கெடுப்þபிþன்படி, இþந்þதியாþவில் : 140 மிþல்þலியþன் ஹெþக்டேர் நலல þவிவசாய நிலங்களும் , 40 மிþல்லியþன் ஹெக்டேர் வனம், சாþர்þந்த þவிவசாய நிலங்களாக உþள்ளன. இவைகளை முழுமையான விவசாய நிலங்களாக மாþற்றþக்கூடிய சாþத்தியக் கூறுகள் அதிகþம் உள்ளதென்று இþந்த கணக்குகள் கூறுகின்றன.
பசுமைப்புரட்þசி மாதிரி திட்டத்தில் இþந்திþயாவிலுþள்ள 25 மிþல்லியþன் ஹெக்டேர் பாசன வளம் பெþற்ற நிலங்களுþம் 17 மில்þலியþன் ஹெக்டேர் பாசன வசதியற்ற நிலங்களும் கொþண்டுவரப்பþட்டிருþந்தன. ஆனாþல் இþந்தியாவிþன் 98 þமில்லியþன் ஹெக்டேþர் þநிலங்கள் ரசாயன உரங்கþளிþன் பயþன்பாþட்டை இþன்றுவரை பெறாமலேயே உள்ளன.
இன்றைþக்குள்ள செயþற்கை உர உற்பத்திþத்þதிறனை வைþத்து மþதிþப்þபிþட்டாþல், இþந்தியாþவிþல் உள்ள 60 மிþல்லியþன் ஹெக்டேþர் நிலக்ளுக்கு செயþற்கை உரþம் என்றுமே கிþட்டாத þநிலை உள்ளது.
இந்த þபுத்தாயிரமாண்டிþல் 80 மில்லியþன் ஹெþக்டேþர் நிலங்கþள் செயþற்கை உரமின்றி தரிசாக கிடக்கும் நிலை உþள்ளது.
இþந்த þநிலையில் இயற்கை உயிரி உரத்தின் உற்பத்தியைþயும், பயனீட்டையுþம் அதிகரிக்கþச் செþய்ய வேண்þடிய யதார்த அவசியத்தில் இþந்தியா உþள்ளது