Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்மையை பேசினால் எதிரிகள் உருவாகிறர்கள்- மம்தா

உண்மையை பேசினால் எதிரிகள் உருவாகிறர்கள்- மம்தா
, வெள்ளி, 14 மார்ச் 2014 (17:38 IST)
FILE
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா திடலில் ஊழல் எதிர்ப்பாளர் அண்ணா ஹசாரேயுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரே திடீரென உடல் நிலை சரியில்லை என்று கழன்று கொண்டார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ராம்லீலா திடலில் கூடியிருந்த மக்களிடையே மத்திய அரசை கடுமையாக தாக்கி இன்று ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான் எனக்காக எதுவும் கேட்டு உங்கள் முன்னால் நிற்கவில்லை. ஐக்கிய முற்போக்கு ஆட்சியை விரட்ட வேண்டும். பா.ஜ.க.வின் ஆட்சி அமைவதையும் தடுக்க வேண்டும். கூட்டணி அரசின் மூலம் நாட்டை பலப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

நான் எனக்காக மட்டும் அதிகாரம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்குமான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறி வருகிறேன். காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றாக சேர்ந்து நாட்டை கூட விற்று விடுவார்கள். இந்த நாடு இந்தியர்கள் வாழ்வதற்கா? அல்லது விற்பனைக்கா? என்பது புரியவில்லை.

ஒருவர் உண்மையை பேசினால் அவருக்கு பல எதிரிகள் உருவாகி விடுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனினும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil