சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு 46,491 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் செம்மலை வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.