Newsworld Career Results 0809 27 1080927013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவ‌ல்துறை எழுத்து தேர்வு முடிவுகள்

Advertiesment
காவல்துறை எழுத்து தேர்வு முடிவுகள்
காவ‌‌ல்துறை‌யி‌ல் ப‌ணி‌க்கான எழுத்து தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கு‌றி‌த்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த 3.8.08 அன்று நடைபெற்றது.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் ட‌பி‌ள்யுட‌பி‌ள்யுட‌பி‌ள்யு.டிஎ‌ன்.‌ஜிஓ‌வி.இ‌ன்/டிஎ‌ன்யுஆ‌ர்எ‌ஸ்‌பி என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை பார்த்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். தேர்வு பெற்றவர்களுக்கான உடற்கூறு தேர்வு, உடல் திறன் தேர்வு ஆகியவை 30.10.08 முதல் நடைபெறும்.

சென்னை மாவட்டத்துக்காரர்கள் சென்னையிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காஞ்சீபுரத்திலும், விழுப்புரம், கடலூர் மாவட்டக்காரர்கள் விழுப்புரத்திலும், வேலூர், திருவண்ணாமலை மாவட்டக்காரர்கள் வேலூரிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரிகாரர்கள் தர்மபுரி தேர்விலும், சேலம், நாமக்கல்லை சேர்ந்தவர்கள் சேலத்திலும், கோவை, ஈரோடு, நீலகிரியை சேர்ந்தவர்கள் கோவை தேர்விலும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள் திருச்சி தேர்விலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்துக்கார்கள் தஞ்சையில் நடக்கும் தேர்விலும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்துக்காரர்கள் ராமநாதபுரம் தேர்விலும், மற்ற மாவட்டக்காரர்கள் அவரவர்கள் மாவட்ட தலைநகரில் நடக்கும் தேர்வில் பங்கு பெறலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil