Publish Date: Sat, 09 Aug 2008 (13:14 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (13:14 IST)
சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை அன்று (ஆகஸ்ட் 11-ஆம் தேதி) வெளியாகின்றன.
சிறப்புத் தேர்வு எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன் மற்றும் ஓஎஸ்எல்சி மாணவ-மாணவிகள், தேர்வுச் சான்றிதழ்களை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை, தத்தமது தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன் தேர்வுகள் நடைபெற்றன. இதில், ஒன்று முதல் 3 பாடங்கள் வரை தோல்வியடைந்தவர்களுக்கு, ஜூலை மாதத்தில் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இத்தேர்வை ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.