Publish Date: Fri, 30 May 2008 (10:19 IST)
Updated Date: Fri, 30 May 2008 (10:19 IST)
சென்னை : 10 ம் வகுப்புத் (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வு எழுதிய மாணாக்கர்களில் 80.9 விழுக்காட்டினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இது கூடுதலாகும். கடந்த ஆண்டு 79.5% பேர் தேர்ச்சி அடைந்தனர்.
தேர்ச்சி அடைந்ததில் மாணவர்கள் 3,01,341 பேரும் (77.8 விழுக்காடு), மாணவிகள் 3,32,062 பேரும் (83.9 விழுக்காடு) ஆவர்.
தேர்ச்சி அடைந்தவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண்களை 3,74,389 பேர் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 11,605 பேரும், அறிவியலில் 591 பேரும், சமூக அறிவியலில் 272 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் 99,025 மாணாக்கர் (93.5 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர்.