Newsworld Career Results 0805 29 1080529021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை 10‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு

Advertiesment
நாளை 10‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு
தமிழகத்தில் கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாத‌ம் நட‌ந்து முடி‌ந்த 10‌ம் வகு‌ப்பு‌‌த் தே‌ர்வு முடிவுக‌ள் நாளை (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) காலை வெளியிடப்படும் என்று அரசு தே‌ர்வு‌த் துறை இய‌க்க‌கம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் கட‌ந்த மா‌ர்‌ச் மாத‌ம் துவ‌ங்‌கி ஏ‌ப்ர‌‌ல் மாத‌த்‌தி‌ல் முடிவைட‌ந்த 10‌ம் வகு‌ப்பு தே‌ர்‌வினை மொ‌த்த‌ம் 7,99,980 பே‌ர் எழு‌தியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் வெ‌ள்‌ளி‌க்‌கிழமை (நாளை) காலை 10‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவுக‌ள் வெ‌ளியாகு‌ம் எ‌ன்று அரசு தே‌ர்வு‌த்துறை இய‌க்கக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை ுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள மாநில அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணியளவில் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தேர்வு முடிவை வெளியிடுகிறார்.

தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் அதே நேரத்தில் பள்ளிகளிலும் தேர்வு முடிவையும், மதிப்பெண் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

எமது இணையதளத்தில்

மாணவ-மாணவிகள் நலன் கருதி எமது த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்-‌ல் 10‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil