Newsworld Career Results 0803 19 1080319015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு 23ஆ‌ம் தேதி வெளியீடு!

Advertiesment
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் சான்றிதழ் மறுகூட்டல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன‌ம்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு மா‌‌ர்‌ச் 23ஆ‌மதேதி வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மா‌ர்‌ச் 28ஆ‌மதேதி கடைசிநாள் ஆகு‌ம்.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், 2007ஆம் ஆண்டு அக்டோப‌ரி‌லநடந்த ஆசிரியர் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய பள்ளி மாணவ-மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மா‌ர்‌ச் 23ஆ‌மதேதி பெற்றுக்கொள்ளலாம்.

சான்றிதழ் பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறுகூட்டல் கேட்டு விரும்பினால் மா‌ர்‌ச் 24ஆ‌மதேதி முதல் 28ஆ‌மதேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே விண்ணப்ப படிவங்களை 28ஆ‌மதேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil