Publish Date: Tue, 07 Oct 2008 (15:25 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (15:25 IST)
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் வரும் 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு பிரிவு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அரசு கலை, அறிவியல் கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்தத் திட்டமிட்டு உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற ஆண்கள் சுமார் 600 பேருக்கு விற்பனை அதிகாரிகளாக பணி நியமனம் அளிக்க இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு குழுமம் முன்வந்துள்ளது.
இதற்கான பட்டதாரிகளை தேர்வு செய்ய ஏதுவாக வரும் 10, 11 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை௩ வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும்.
முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் தன்விவர படிவத்தை கொண்டு வர வேண்டும். இதில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.