Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சை: 50 நிறுவனம் பங்கேற்கும் வேலைக் கண்காட்சி!

Advertiesment
தஞ்சை 50 நிறுவனம் பங்கேற்கும் வேலைக் கண்காட்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (12:25 IST)
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான 2 நாள் கண்காட்சி வரும் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 50 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

தஞ்சையை அடுத்துள்ள வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம், பிளேம்பாயன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வரும் 8, 9 தேதிகளில் வேலைவாய்ப்புக் கண்காட்சியை, பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துகிறது.

இதில் 22 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 9 வங்கித் துறை நிறுவனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிஇ., பிடெக்., எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்இ துறைகளில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் சுமார் 4,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இருந்து பட்டப் படிப்பு வரை 60 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக ரூ. 250 செலுத்தி, அனுமதி நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் அய்யாவு இத்தகவலை செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil