Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணிதத்தில் தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு வகுப்பு!

Advertiesment
கணிதத்தில் தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு வகுப்பு!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (12:26 IST)
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்தோருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வரும் 10 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்த சிறப்பு வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15 ஆம் தேதி தொடங்கி 15 நாட்களுக்கு நடைபெறும் இந்த கணித சிறப்பு வகுப்புகளில் சேருவதற்கு ரூ. 2,000 கல்விக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இத்தொகையை 'இயக்குனர், சென்டர் பார் பேகல்டி டெவலப்மென்ட், அண்ணா பல்கலைக்கழகம்' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக அளிக்க வேண்டும்.

சிறப்பு கணித வகுப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். சென்னையில் கிண்டி, குரோம்பேட்டை மற்றும் வேலூர், சேலம், கோவை, காரைக்குடி, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் 044 - 2220 3006, 2220 3010 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil