Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு அளிக்கும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

அரசு அளிக்கும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!
, சனி, 4 அக்டோபர் 2008 (15:37 IST)
மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிலையம், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை அளிக்கிறது. 18 வயது நிரம்பிய எவரும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.

மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிலையம் (முன்னாள் சிறுதொழில் சேவை நிலையம்), சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, வரும் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை இதற்கான வகுப்புகள் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதி தேவையிலை. 18 வயது நிரம்பிய ஆண்- பெண் எவரும் இதில் சேரலாம். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ. 3,500 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணத்தை The Director, MSME-DI, PDA/C, Chennai என்ற பெயருக்கு காசோலையாக, சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து, தன்னிலை விளக்கத்துடன் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வரும் 21.10.2008 ஆம் தேதிக்குள் 'உதவி இயக்குனர் (கண்ணாடி மற்றும் பீங்கான் துறை), எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிலையம், இந்திய அரசு, 81/1, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை- 32' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் 97907 54448, 94437 28438 என்ற செல்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறியலாம்.

Share this Story:

Follow Webdunia tamil