Publish Date: Fri, 03 Oct 2008 (12:45 IST)
Updated Date: Fri, 03 Oct 2008 (12:26 IST)
மேலாளர்கள், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்புக் கண்காட்சி கோவையில் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு 'ஜாய்னஸ்.இன்' ஏற்பாடு செய்துள்ளது. மேலாளர்கள், சந்தைப் படுத்துதல் அதிகாரிகள், கணக்காளர்கள் (அக்கவுண்டன்ட்), இயந்திர நிர்வகிப்பாளர் (மிஷின் ஆபரேட்டர்) உட்பட பல்வேறு துறைகளுக்கு இதில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சம்மந்தப்பட்ட துறைகள் தொடர்பான பாடங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அனுவமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். டாடா ஏஐஜி காப்பீடு நிறுவனம், மேக்ஸ் நியூயார்க், ஐசிஐசிஐ, ஏர்டெல், கன்ட்ரி கிளப் இன்டர்னேஷனல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்று பணியார்களை தேர்வு செய்யவுள்ளன.
இதுகுறித்த மேலும் விவரம் அறிய 99655 15210, 99655 18210 என்ற செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.