Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் யு.எஸ். பல்கலை கல்விக் கண்காட்சி!

Advertiesment
சென்னையில் யு.எஸ். பல்கலை கல்விக் கண்காட்சி!
அமெரிக்கா - இந்தியா கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.இ.எப்.) மற்றும் அமெரிக்காவின் லிண்டேன் கல்வி சேவைகள் அமைப்பு ஆகியன இணைந்து லிண்டேன் அமெரிக்க பல்கலைக்கழக கல்விக் கண்காட்சியை வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடத்துகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் இக்கண்காட்சி, பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் 1 மணி முதல் 2 மணி வரை அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவோர் உள்ளிட்ட மற்றவர்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.

கல்விக் கண்காட்சிக்குப்பின் அமெரிக்காவில் உள்ள 24 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்ச் சேர்க்கை தொடர்பான அதிகாரிகளை சந்தித்து கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களை டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ. லிண்டேன்டூர்ஸ்.காம் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil