Publish Date: Fri, 26 Sep 2008 (13:02 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (13:01 IST)
தகவல் தொழில்நுட்பம், வங்கிகள், காப்பீட்டுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த கண்காட்சி ஒன்றை நவ்க்ரி இணையதளம் இவ்வார இறுதியில் சென்னையில் நடத்துகிறது.
வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
தகவல் தொழில் நுட்பம், பொறியியல், வங்கி, காப்பீடு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்களிடம் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்குகின்றன.
தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கான வேலைவாய்ப்புகள், அது தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டுத் தெளிவு பெறலாம். இதற்கு அனுமதி இலவசம்.