இந்திய குடிமைப்பணி பிரதானத் தேர்வு எழுத விரும்பும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதி திராவிட கிறித்தவ இளைஞர்களுக்கு தாட்கோ நிறுவனம் ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்குகிறது.
2008 ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வெழுதிய எழுதிய ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதி திராவிட கிறித்தவ மாணவர்கள், 2008 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. (Union Public Service Commission) நடத்தவிருக்கும் இந்தியக் குடிமைப்பணி பிரதானத் தேர்வு எழுதுவதற்கு தயார் செய்து கொள்ளும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழக்கப்படுகிறது.
இதற்காக ஊக்கத் தொகை ரூ. 25,000 ஐ, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழங்குகிறது. தகுதியுள்ள மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பத்தை எழுதி, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படங்கள், சாதிச்சான்று, இந்தியக் குடிமைப்பணி (முதன்மைத் தேர்வு) பதிவு எண், பெயர், மே 2008-ல் நடந்த இந்தியக் குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று (விருப்பப் பாடங்கள் I, II குறிப்பிட வேண்டும்) ஆகியவற்றின் சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது 'இந்திய குடிமைப்பணி (பிரதான) தேர்வுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பம்' என்று குறிப்பிட வேண்டும்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் நிதியுதவி பெற்ற விண்ணப்பதாரர்களும் இந்த ஊக்கத்தொகையைப் பெற தகுதியுடையவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), திருமங்கலம், சென்னை - 101' என்ற முகவரிக்கு 15.10.2008 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.