Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலைவாய்ப்புக்கான இணையதளம்: மைன்ட்லாஜிக்ஸ்

Advertiesment
வேலைவாய்ப்புக்கான இணையதளம்: மைன்ட்லாஜிக்ஸ்
, புதன், 24 செப்டம்பர் 2008 (16:13 IST)
வேலைவாய்ப்புக்கு என்றே பிரத்யேகமான இணையதளத்தை விரைவில் தொடங்கவிருப்பதாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைன்ட்லாஜிக்ஸ் அறிவித்துள்ளது.

மைன்ட்லாஜிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சுரேஷ் இளங்கோவன் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இத்தகவலை வெளியிட்டார்.

புதியதாக பட்டம் படித்து வெளிய வரும் இளைஞர்களின் வேலைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த இணையதளம் தனது சேவைகளை அளிக்கும் என்று குறிப்பிட்ட அவர், பொறியியல், வர்த்தகம், மேலாண்மை போன்ற துறைகளின் தேவைகளுக்கு தங்களது இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil