Publish Date: Sat, 20 Sep 2008 (18:29 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (18:21 IST)
ஈரோடு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சத்த்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்வோர் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், கணக்கு வழக்குகளை சரிவரக் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். வயது 25 ல் இருந்து 40 க்குள் இருக்க வேண்டும்.
இதேபோல் சமையல் உதவியாளர் பணிக்கு 25 முதல் 45 வயதுக்குட்பட்ட எழுத படிக்க தெரிந்த பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாநகராட்சி அல்லது நகராட்சி ஆணையருக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 16 ஆம் தேதி நடைபெறும்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.