Newsworld Career Opportunities 0809 20 1080920038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறுகியகால தொழிற்பயிற்சிகள்!

Advertiesment
குறுகியகால தொழிற்பயிற்சிகள் கோவை ராமகிருஷ்ண மிஷன் மின்னியல்
, சனி, 20 செப்டம்பர் 2008 (15:20 IST)
கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா தொழில்பயிற்சி நிலையத்தில் குறுகியகால தொழிற்பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா தொழில்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வாகனப் பழுபார்ப்பாளர், மின்னியல், மின்னணுவியல், பற்றவைத்தல், தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், நர்சிங் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் மற்றும் தேர்வுகளை நடத்துகிறது.

இப்பயிற்சியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள் சேரலாம். மனுதாரர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 14 வயதை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

குறுகியகால திறன் தொழில் பயிற்சித் தேர்வுக்கு மனுதாரர்களிம் இருந்து வசூலிக்கப்படும் தேர்வுக் கட்டணம், அவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பின் திருப்பித் தரப்படும்.

இதில் சேர விரும்புவோர் சுயவிலாசமிட்ட, தபால்தலை ஒட்டப்பட்ட உறையை முதல்வர்,ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய தொழிற்பயிற்சி நிலையம், பெரியநாயக்கன்பாளையம், வித்யாலயா அஞ்சல், கோவை௨ என்ற முகவரிக்கு ஒட்டி, மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil