Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

துபா‌யி‌ல் பொ‌றியாள‌ர்களு‌க்கு வேலைவா‌ய்‌ப்பு: தமிழக அரசு நிறுவனம் தக‌வ‌ல்!

Advertiesment
துபா‌யி‌ல் பொ‌றியாள‌ர்களு‌க்கு வேலைவா‌ய்‌ப்பு: தமிழக அரசு நிறுவனம் தக‌வ‌ல்!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (11:09 IST)
துபாய் நாட்டில் உள்ள முன்னணி கண்ணாடி தொழிற்சாலைக்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்‌பி‌லபட்டமஅல்லதப‌ட்டய‌மபெற்றவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் எ‌ன்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.பிந்துமாதவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துபாய் நாட்டில் உள்ள முன்னணி கண்ணாடி தொழிற்சாலைக்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்‌பி‌ல் ப‌ட்டய‌ம் அல்லது பட்டம் பெற்றவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள்.

சி.என்.சி. ஆபரேட்டர்கள், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற கிளாஸ் பணியாளர்கள், ஆட்டோமேட்டிக் கிளாஸ் பெண்டிங் இயந்திர ஆபரேட்டர்கள், பி.வி.பி. லேமினேஷன் லைன் டெக்னீசியன்கள் ஆகியோருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது.

கண்ணாடி தொடர்புடைய பிரிவில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியானோர் விண்ணப்பம், கல்வித்தகுதி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் (2 நகல்கள்) ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 26ஆ‌ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய 044-24464268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil