Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'பொனடிக்' முறையில் சரளமாக ஆங்கிலம் பேசலாம்!

Advertiesment
'பொனடிக்' முறையில் சரளமாக ஆங்கிலம் பேசலாம்!
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:43 IST)
ஆங்கிலத்தில் படபட வென்று பேச வேண்டும் என்பது பலருக்கு கனவாகவே இருக்கிறது. ஆங்கிலம் பேசிப் பழகலாம் என்றால் கூட, தவறின்றி பேசுகிறோமா? நாம் பேசும் ஆங்கிலம் தெளிவான, முறையான உச்சரிப்புடன் இருக்குமா? பிறரை கவர்ந்திழுக்கும் வகையில் 'நுனி நாக்கில்' ஆங்கிலம் பேச முடியுமா? என அடுக்கடுக்காக சந்தேகங்கள் நம்முன் தோன்றி, நமது பேசும் முயற்சியில் மண்ணைத் தூவி விடுகின்றன.

நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் கூட சரியான, முறையான உச்சரிப்பு தெரியாத காரணத்தால் மற்றவர்களிடம் பேசத் தயங்குவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு என்கிறார் சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அவினாஷ்.

நாம் நினைப்பது போல் ஆங்கிலத்தில் பல்வேறு வகைகள் என்று எதுவும் இல்லை. இரண்டு வகை ஆங்கிலம் மட்டுமே உள்ளன. ஒன்று 'பிரிட்டன் இங்கிலீஷ்'; மற்றொன்று 'அமெரிக்க இங்கிலீஷ்' என்று கூறும் அவர், பொனடிக் முறை (அதாவது உச்சரிப்பு முறையில்) ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதால் சரளமாகவும், தெளிவாகவும் பேச முடியும் என்கிறார்.

பொனடிக் முறையில் ஆங்கிலமா? என்று மலைக்க வேண்டாம். இது மிகவும் எளிதானது. உதாரணத்திற்கு Plate (பிளேட்) என்பதை 'பிளேட்' என்றும், (GO) வை 'கோ' என்றும் நாம் உச்சரிக்கிறோம். ஆனால் அவற்றை முறையே 'பிளெயிட்' 'கவ்' என்று தான் உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து பேசும்போது நமது பேச்சு முறை வெளிநாட்டினரின் தரத்திற்கு இணையாக இருக்கும். இதுதான் பொனடிக் முறை என்று விளக்குகிறார் அவினாஷ்.

வெறும் பேச்சோடு நின்று விடாமல் பொனடிக் முறையில் ஆங்கிலப் பயிற்சிகளையும் அவரும், அவரது மனைவி விஜய லட்சுமியும் அளித்து வருகின்றனர். நவபாரத் ஆங்கிலப் பயிற்சி மையம் என்ற பெயரில் சென்னை திருவல்லிக்கேணியில் இதற்கென பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச பொனடிக் கூட்டமை (ஐ.பி.ஏ.) வகுத்துள்ள வழிமுறைகளின்படி பயிற்சிகள் அளிக்கப்படுவதாக அடக்கத்துடன் கூறுகிறார் அவினாஷ். விவரங்களுக்கு: 99401 44605, 98407 22178.

Share this Story:

Follow Webdunia tamil