Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோழிப்பண்ணை துறையில் வேலைவாய்ப்பு!

Advertiesment
கோழிப்பண்ணை துறையில் வேலைவாய்ப்பு!
, வியாழன், 17 ஜூலை 2008 (16:49 IST)
நமது உணவில் தவிர்க்க முடியாதாத ஒன்றாகிவிட்டது முட்டை! குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு முட்டை பெரிதும் துணையாக உள்ளது.

இதேபோல் வளமான எதிர்காலம் தேடுவோருக்கு முட்டையும் அதுதொடர்புடைய கோழிப் பண்ணைத் தொழிலும் சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.

உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்திலும், கோழி இறைச்சி உற்பத்தியில் 5-வது இடத்திலும் உள்ளது. இத்துறையில் நமது நாடு ஆண்டுக்கு 10 முதல் 15 விழுக்காடு வளர்ச்சியை கண்டு வருவது ஒன்றே, கோழிப்பண்ணைத் துறையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

இந்தியா உட்பட உலகளாவிய அளவில் தற்போது உணவு முறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், கடந்த சில ஆண்டுகளில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் தேவைகளை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளன.

கோழிப் பண்ணையை அமைத்து முட்டை மற்றும் கோழி இறைச்சிகளை உற்பத்தி செய்வது மட்டுமே கோழிப் பண்ணைத் தொழில் அல்ல.

கோழிப் பண்ணையை நிர்வகித்தல், வர்த்தக ரீதியாக முட்டை- இறைச்சிகளைச் சந்தைப் படுத்தி அவற்றை ஏற்றுமதி செய்தல், கோழிப் பண்ணை தொழிலுக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்தல், கோழிப் பண்ணையுடன் தொடர்புடைய தீவனம் தயாரிப்பு போன்ற பணிகளும் இத்துறையுடன் தொடர்புடைவை தான்.

பெரிய விவசாயிகள், நிலச்சுவான்தாரர்கள் தான் கோழிப் பண்ணையை அமைத்து இலாபத்துடன் நடத்த முடியும் என்ற கருத்து சிலரிடையே உள்ளது. இது முற்றிலும் தவறானது. எவருக்கும் இத்தொழில் ஏற்றதே!

இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் கோழி, கால்நடைப் பண்ணைகள் அமைப்பது தொடர்பான பாடங்களை கற்பிக்கின்றன. இத்தகைய பட்டயப் படிப்பு (டிப்ளமோ), பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் பண்ணை அமைப்பதற்கு நிதியுதவி செய்து தருகின்றன.

வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி(நபார்ட்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகள், இத்தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு நிதியுதவி புரியக் காத்திருக்கின்றன.

'தகவல் தொழில் நுட்பமும், பொறியியல்- மருத்துவப் படிப்புகளும் தான் வாழ்க்கை' என்ற மாயையில் சிக்கியுள்ள இன்றைய இளைஞர்கள், கோழிப் பண்ணைத் தொழிலில் உள்ள தொழில் வாய்ப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது சாத்தியமானால் வலுவான இந்தியாவும், வளமான இளைய தலைமுறையும் உருவாகுதலை எவராலும் தடுக்க முடியாது என்பது திண்ணம்.

தமிழகம், புதுவையில் கோழிப் பண்ணை தொடர்புடைய பாடங்கள் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சில:

1. தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை
2. கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், நாமக்கல்
3. ராஜிவ் காந்தி கால்நடை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி

உங்களுக்காக சில தகவல்கள்:

* கோழிப் பண்ணை தொழில் என்றாலே நாமக்கல் தான் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. அரசு புள்ளி விவரப்படி (2006- 07), இம்மாவட்டத்தில் 588 கோழிப் பண்ணைகள் உள்ளன. நாமக்கல்லில் மட்டும் 310 பண்ணைகள் உள்ளன.

* இம்மாவட்டத்தில் சராசரி ஒரு கோடியே 94 லட்சத்து 55 ஆயிரத்து 300 கோழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

* இங்கு நாள்தோறும் 9 லட்சத்து 15 ஆயிரம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

* கோழிப் பண்ணைத் தொழிலில் சுமார் 97 ஆயிரத்து 276 பேர் ஈடுபட்டுள்ளதாக, அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil