Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் பண்ணைத் தொழிலில் வேலைவாய்ப்பு!

பால் பண்ணைத் தொழிலில் வேலைவாய்ப்பு!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (19:25 IST)
வேளாண் தொழிலை நம்பியுள்ள நாடு இந்தியா! மொத்த மக்கள் தொகையில் 72 விழுகாட்டினர் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களில் 60 விழுக்காட்டினர் விவசாயத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

இதில் 7 கோடி பேர், அதாவது இரண்டு விவசாயக் குடும்பங்களில் ஒன்று என்ற அடிப்படையில் பால் பண்ணை அல்லது அது தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பால் வளத்துறையைப் பொருத்தவரை, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளே 70 விழுக்காடு உற்பத்தியை செய்து வருகின்றனர். கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தில் பால் உற்பத்தி பெரும் பங்கு வகிப்பதையே இது நமக்கு நன்கு உணர்த்துகிறது.

விவசாயமும், பால் பண்ணைத் தொழிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையத் துறைகள் ஆகும். கால்நடைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் விவசாயப் பொருட்களில் இருந்து பெறப்படுகிறது. வேளாண் துறைக்கு தேவையான உரம் உள்ளிட்டவை கால்நடைகளிடம் இருந்து கிடைக்கின்றன.

பால் பண்ணைத் தொழில் என்பது பாலுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தயிர், வெண்ணெய், நெய் என பல்வேறு துணை பொருட்களும் இவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா போன்ற, பெரிய சந்தை வாய்ப்புகள் உள்ள வளர்ந்து வரும் நாட்டில், பால் பண்ணை தொழில் மூலம் முன்னேற பல வாய்ப்புகள் உள்ளன.

பால் பண்ணை தொழிலை தொடங்குவோருக்கு அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகள் பல்வேறு உதவிகள், சலுகைகளை வழங்கி வருகின்றன.

மத்திய அரசின் 'தேசிய பால் பண்ணை வளர்ச்சி வாரியம் (என்.டி.டி.பி.) பால் பண்ணை தொடங்குவது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகள், நிதியுதவிகளை அளித்து வருகிறது.

இதேபோல் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பால் பண்ணை தொடர்பான படிப்புகள், சான்றிதழ் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இத்துறையில் ஈடுபட விரும்புவோருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பது உறுதி.

பெங்களூருவில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சிக் கழகத்தில் பால் பண்ணை தொடர்பான 2 ஆண்டு பட்டயப் படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பால் பண்ணை, கால்நடை தொடர்புடைய துறைகளுக்கான படிப்புகளை அளித்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், புதுச்சேரியில் உள்ள ராஜிவ் காந்தி கால்நடை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட சில நிறுவனங்களில் பால் பண்ணை தொடர்பான படிப்புகள் உள்ளன.

கர்நாடகாவில் உள்ள பிதார், ஹெப்பால், ஆந்திராவில் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் பால் பண்ணை தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து இதற்கான பாடப்பிருவுகளை நடத்தி வருகின்றன.

'குழந்தை வளர தாய்ப்பால் தேவை' என்று முன்னர் கூறி வந்தோம், இன்றோ, ' பொருளாதாரத்தில் நாம் வளர பால் பண்ணை தேவை' என்று கூறுவதே மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

இதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து, பால் பண்ணைத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்!

Share this Story:

Follow Webdunia tamil