Newsworld Career Opportunities 0807 04 1080704046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

Advertiesment
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
, வெள்ளி, 4 ஜூலை 2008 (14:59 IST)
கடலூரில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை , இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது.

தொட‌ர்‌ந்து 7 நா‌ட்க‌ள் நடைபெறு‌ம் ராணுவ‌த்‌தி‌ற்கு ஆ‌ள் சே‌ர்‌ப்‌பி‌ல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் ப‌ங்கே‌ற்கலா‌ம்.

இந்திய ராணுவத்திற்கு சிப்பாய் பொதுபணி, சிப்பாய் வர்த்தகபணி, சிப்பாய் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிகளுக்கு கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அமைப்பு மைதானத்தில் (அண்ணா ‌விளையா‌ட்டர‌ங்க‌ம்) இ‌ந்த ள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

சிப்பாய் பொதுப் பணிக்கு, 171/2 முதல் 21 வயது (10-7-1987 முதல் 8-1-1991-க்குள் பிறந்திருக்க வேண்டும்) வரை இருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப்பணி, சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு, 171/2 முதல் 23 வயது (12-7-85 முதல் 10-1-91-க்குள் பிறந்திருக்க வேண்டும்) வரை இருக்க வேண்டும். உயரம் 166 சென்டி மீட்டரும், 50 கிலோ எடையும், மார்பளவு 77-82 செ.மீ. இருக்க வேண்டும்.

சிப்பாய் பொதுப் பணிக்கு, பள்ளி இறுதித் தேர்வில் 45 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தக பணிக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு, பிளஸ்-2 அல்லது அத‌ற்கு இணையான படிப்பில் ஆங்கிலம், கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடங்கள் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இ‌ந்த தகவ‌ல்களை சென்னை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil