Publish Date: Wed, 25 Jun 2008 (17:11 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (17:10 IST)
சென்னை: பிரிட்டன் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான விசா கருத்தரங்கு சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் வளாகத்தில் நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.
விசாவுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பத்துடன் சேர்க்கப்படவேண்டிய ஆவணங்கள் என்ன? என்பது உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரிட்டன் விசா அதிகாரிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க இடம் கிடைத்துள்ள மாணவர்களும், எதிர்காலத்தில் பிரிட்டனில் கல்வி பயில விரும்பும் மாணவர்களும் பயன்பெறுமாறு இந்த மாணவ விசா கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தூதரக துணை ஆணையத்தின் நுழைவு அனுமதி அதிகாரி ஜிம் ராபின்சன் மாணவர்களுக்கு சமீபத்திய விசா நடைமுறைகளை விவரிக்கிறார்.
ஏற்கனவே பிரிட்டன் கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களது தேர்வு அனுமதி கடிதத்தை கொண்டு வந்தால் பரிசு காத்திருக்கிறது. கருத்தரங்க நுழைவு அனுமதி இலவசம்.