Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர்கள் தேவை

Advertiesment
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர்கள் தேவை
, வெள்ளி, 20 ஜூன் 2008 (12:47 IST)
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குத் தேவையான 300 உதவி பொறியாளர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு பி.இ. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் தகுதியானவர்களாவர்.

மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பொறியியல் பட்டதாரிகளின் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படும்.

இந்த பட்டியலின் அடிப்படையில் பணி நியமனம் அளிக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேப்போல பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் டப்ளமோ முடித்தவர்களுக்கான பழகுனர் பயிற்சி (அப்ரண்டீஸ்) சேர்க்கவும் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil