Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10-ம் வகுப்பு முடி‌த்தவ‌ர்களு‌‌க்கு சிறப்பு பதிவு முகாம்

Advertiesment
10-ம் வகுப்பு முடி‌த்தவ‌ர்களு‌‌க்கு சிறப்பு பதிவு முகாம்
, சனி, 14 ஜூன் 2008 (11:34 IST)
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு சிறப்புப் பதிவு முகாம் 16ஆ‌ம் தே‌தி தொட‌ங்‌கி தொட‌ர்‌ந்து ஐ‌ந்து நா‌ட்க‌ள் நடைபெறு‌கிறது.

இது கு‌றி‌த்து மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ல் காக‌ர்லா உஷா வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌வி‌ப்‌பி‌ல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவ‌ர்க‌ள் வேலை வா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் ப‌திவு செ‌ய்வத‌ற்கு வச‌தியாக செ‌ன்னை‌யி‌ல் சிறப்புப் பதிவு முகாம் நட‌த்த‌ப்படு‌கிறது.

வரு‌ம் ‌தி‌ங்க‌ட்‌கிழமை அதாவது 16ஆ‌ம் தே‌தி தொட‌ங்‌கி தொட‌ர்‌ந்து ஐ‌ந்து நா‌ட்க‌ள் இ‌ந்த ‌சிற‌ப்பு முகா‌ம் நடைபெறு‌கிறது.

சென்னையில் இம்முகாம்கள் நடைபெறும் இடங்கள்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தங்கசாலை பஸ்நிலையம் அருகில், சென்னை 600 021.

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, லேடி வெல்லிங்டன் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை 600 005.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032.

வெ‌ள்‌ளி‌க்‌கிழமை வரை நடைபெறும் இம்முகாம் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும், இம்முகாம்களுக்கு அனைத்து கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை அசல், நகல் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும் எ‌ன்று காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil