பின்லாந்து நாட்டில் பணிபுரிய தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற 10,000 செவிலியர்கள் தேவை என்று அந்நாட்டு அரசு கேட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் இளங்கோ, "தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களின் மருத்துவ சேவை சிறப்பாக உள்ளத. இதை நிரூபிக்கும் வகையில், பின்லாந்து நாட்டு அரசு, அந்நாட்டில் பணியாற்ற 10,000 செவிலியர்கைள தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
செவிலியர் படிப்பு முடிந்து பணி புரிந்து வருபவர்கள், செவிலியர் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் ஒரு நிலையில் நின்றுவிடாமல் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த படிப்புகளை படித்து தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.