Newsworld Career Opportunities 0805 17 1080517045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 2 தே‌‌‌றியவ‌ர்களு‌க்கு சிறப்பு முகாம்!

Advertiesment
பிளஸ் 2  தே‌‌‌றியவ‌ர் சிறப்பு முகாம் வேலைவாய்ப்பு அலுவலக‌‌ம்
, சனி, 17 மே 2008 (17:13 IST)
நட‌ந்து முடி‌ந்த ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி தே‌‌ர்‌ச்‌சி பெ‌ற்ற மாணா‌க்க‌ர்க‌ள் சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செ‌ய்து கொ‌ள்ள மே 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இது தொட‌ர்பாமாவட்ஆட்சியர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மே 21ஆம் தேதி அளிக்கப்பட உள்ளதால், மே 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐந்து வேலை நாட்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) சென்னை திருவல்லிக்கேணி, காமராஜர் சாலையில் உள்ள அரசு முன் மாதிரி மேல் நிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.

இம்முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இப்பதிவிற்கு வரும் மாணவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவை கொண்டு வருதல் வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ஆ‌மவகு‌ப்பதேர்வு மதிப்பெண்கள் சான்றினைக் கொண்டு ஏற்கனவே பதிவு செய்தவர்கள், சென்னை, சாந்தோமிலுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று கூடுதல் கல்வி தகுதியினை பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil